search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயநகர் தொகுதி"

    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கிறது.

    ஜெயநகர் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 13–ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். #Karnataka #Jayanagar #Bypoll
    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடந்தது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத பாபுவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், ஜேடி.எஸ். கூட்டணி அமைத்துள்ளதால், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். ஆதரவு அளித்துள்ளது.

    ஜெயநகர் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பெண்களுக்கென்று 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 துணை ராணுவ படையினரும் 350 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    23 பறக்கும்படை போலீசார் தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிவருகிறார்கள். இன்று காலை 6 மணி முதலே வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

    பா.ஜனதா வேட்பாளர் பிரகலாதபாபுவும் ஓட்டுப் போட்டார். நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் 51-வது வாக்குச்சாவடியான சுதர்‌ஷன் வித்யாமந்திர் பள்ளியில் ஓட்டுப் போட்டார். தொடர்ந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஓட்டுப்பதிவுக்காக ஜெயநகர் தொகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன. #KarnatakaBypoll #Jayanagar

    கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. #Karnataka #Jayanagar #Bypoll
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தலுக்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13–ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது. #Karnataka #Jayanagar #Bypoll
    கர்நாடகாவில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaJayanagar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் பிரசாரத்தின்போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஒரு குடியிருப்பில் இருந்து கத்தை கத்தையாக வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதியிலும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. எனவே, மீதமுள்ள 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    இந்நிலையில், ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜெயநகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கு மே 25-ம்தேதி கடைசி நாள் ஆகும். 26-ம் தேதி  மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 28-ம் தேதி கடைசி நாள். 

    அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 11-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

    இதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் மே 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

    இதேபோல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமாரசாமி ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்யும்போது அந்த தொகுதி காலியாகும். #KarnatakaElection #KarnatakaJayanagar
    ×